ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: குழுவை அறிவித்தார் அண்ணாமலை!

author img

By

Published : Aug 4, 2021, 2:14 PM IST

உள்ளாட்சித் தேர்தல் 2021 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 17 பேர் அடங்கிய பாஜக மாநிலக் குழுவை அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக மாநிலக்குழு அறிவிப்பு
பாஜக மாநிலக்குழு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கு செப்டம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியும் அதற்கான வேலையில் இறங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை 17 பேர் அடங்கிய மாநிலக் குழுவை அறிவித்துள்ளார்.

அக்குழுவில் இடம்பெற்றோர் விவரம்:

  1. பொன் ராதாகிருஷ்ணன் (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்) - மாநில முன்னாள் தலைவர்
  2. நயினார் நாகேந்திரன் (சட்டப்பேரவை உறுப்பினர்) - மாநிலத் துணைத் தலைவர்
  3. வி.பி. துரைசாமி (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்) - மாநிலத் துணைத் தலைவர்
  4. எம்.என். ராஜா - மாநிலத் துணைத் தலைவர்
  5. கே.டி. ராகவன் - மாநிலப் பொதுச்செயலாளர்
  6. ஜி.கே.எஸ். செல்வகுமார் - மாநிலப் பொதுச்செயலாளர்
  7. பேரா. ராம ஸ்ரீனிவாசன் - மாநிலப் பொதுச்செயலாளர்
  8. கரு. நாகராஜன் - மாநிலப் பொதுச்செயலாளர்
  9. பி. கார்த்தியாயினி (முன்னாள் மேயர்) - மாநிலச் செயலாளர்
  10. வானதி சீனிவாசன் (சட்டப்பேரவை உறுப்பினர்) - தேசிய மகளிர் அணித் தலைவி
  11. எம்.ஆர். காந்தி (சட்டப்பேரவை உறுப்பினர்) - தேசிய பொதுக்குழு உறுப்பினர்
  12. சி.கே. சரஸ்வதி (சட்டப்பேரவை உறுப்பினர்) - தேசிய பொதுக்குழு உறுப்பினர்
  13. சசிகலா புஷ்பா (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்) - தேசிய பொதுக்குழு உறுப்பினர்
  14. சி. நரசிம்மன் (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்) - மாநிலச் செய்தித் தொடர்பாளர்
  15. கே.பி. ராமலிங்கம் (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்) - சிறப்பு அழைப்பாளர்
  16. கு.க. செல்வம் (சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்) - சிறப்பு அழைப்பாளர்
  17. சம்பத் (சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்) - சிறப்பு அழைப்பாளர்

இதையும் படிங்க: நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: தீவிரம் காட்டும் அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.