ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 4 - ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு - தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு

உண்மையில் சொல்லப்போனால் மக்களாட்சி... மக்களாட்சி... என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் மெய்யான மக்களாட்சி நடப்பது உள்ளாட்சி அமைப்பில் மட்டுமே

உள்ளாட்சி
author img

By

Published : Nov 23, 2019, 3:02 PM IST

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக ஒன்றியம். இங்கு பல்வேறு மொழிகள் பேசும், கலாசாரம், உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக கிராமங்கள் மிக அதிகம். அதனால்தான் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் மகாத்மா காந்தி. அந்த முதுகெலும்பு வளையாமல், உடைந்து போகாமல் இருக்க 73ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தம் உதவியது. ஆம் அதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் கிராமங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படுகிறது. முக்கியமாக மக்களாட்சி என்று கூறப்படும் இந்தியாவில் உண்மையாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளில் மாநகராட்சி மன்றங்களுக்கான மேயர் (தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் தேர்தல் மறைமுகமாக நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் இம்மாநகராட்சிப் பகுதிகளின் உறுப்பினர்கள் (வார்டு உறுப்பினர்கள்), நகராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்நகராட்சிகளிலுள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இப்பேரூராட்சிகளிலுள்ள பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இம்மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்த ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

ஊராட்சி நிர்வாகம் தனி நபரோ, இல்லை குழுக்களின் கட்டுப்பாட்டிலோ செயல்படாமல் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயல்படும். இதன் மூலம் தங்களது கிராம வளர்ச்சிக்கு மக்களே நேரடியாக பங்காற்ற முடியும் என்பது இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மிக முக்கியமாக, இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரைதான் இயங்க வேண்டும் என்ற வரையறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிடையாது. ஏனெனில் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படும் மக்கள் நிர்வாகம். எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படுவதற்கு அதிகாரம் உண்டு. ஒரு ஊராட்சியை அமைக்க 3,000 பேர் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ., இவர் வருவாய்த் துறையின் ஊழியர்) ஊராட்சி கேட்டால் தேவையான தரவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சாமானியனின் தேவைகளும், வேண்டுகோளும் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கேட்காது. அவர்களின் காதுகள் தொலைதூரத்தில் இருப்பதாலும், அவர்களின் காதுகளுக்கு சாமானியனின் சத்தம் சென்றடைய இடையில் ஏகப்பட்ட தடைகள் இருப்பதால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகமாகவே இருக்கிறது.

உதாரணமாக அடிப்படைத் தேவைகளான பொது சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்கு போன்றவைளை எல்லாம் உச்ச அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலில் வாக்கு கேட்க வரும்போது இவை அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறிவிட்டு செல்பவர்கள் மீண்டும் வருவார்களா என்பது சந்தேகமே.

ஆனால், ஊராட்சி நிர்வாகம் மேற்கூறியவற்றைச் செயல்படுத்தி மக்களுக்கு எளிமையாக உதவலாம். ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களோடு மக்களாக இருப்பது இந்த ஊராட்சி நிர்வாகத்தில் மட்டும்தான். அவர்களை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். அதுமட்டுமின்றி ஊராட்சிக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வையிடவும் செய்யலாம்.

ஒரு ஊராட்சிக்கு மத்திய, மாநில நிதிக்குழு மானியங்கள், மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதிகள் உள்ளிட்டவை கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஊராட்சி விதிக்கும் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் மூலம் கிடைக்கும் நிதியும் ஊராட்சிக்கு கிடைக்கும். ஏறத்தாழ ஊராட்சி ஒன்றுக்கு வருடத்திற்கு 7 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், நிதிக்குழு மானியங்களோ, அரசுகளின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதியோ சரிவர ஊராட்சிக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த ஊராட்சி தலைவர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடரலாம்.

உண்மையில் சொல்லப்போனால் மக்களாட்சி... மக்களாட்சி... என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் மெய்யான மக்களாட்சி நடப்பது உள்ளாட்சி அமைப்பில் மட்டுமே. இப்படி வல்லமை படைத்த உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கிறது. கடைசியாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் 2011ஆம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.Body:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் ஆகிய வட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், மாதாந்திர உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி வீடு திட்டம், வேளாண் உபகரணங்கள் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் கடந்த 27 8 2019 முதல் 31 8 2019 வரை நேரடியாக பெறப்பட்டு, மனுதாரர்களின் தகுதியானவர்களுக்கு நிவர்த்தி காணப்பட்டு, பல்வேறு துறைகளின் மூலமாக வட்ட அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதோடு மட்டுமல்லாது தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டு பேசினார். பின்னர் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Conclusion:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.