சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை (அக்.9) நடைபெற உள்ளது.
முதல்கட்டத் தேர்தலில் 74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், நாளை இரண்டாம் கட்டத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில் 28 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் என 130 இடங்களை நிரப்ப உடனடியாக கூட்டத்தைக் கூட்ட மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கும் விரைவில் மறைமுகத் தேர்தல் அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதே போல் நகராட்சித் தேர்தல் குறித்த ஆலோசனையிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு