சென்னை வந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் கேரளா புறப்பட்டார்.
சென்னையில் பிரதமர் மோடி: முழு விவரம் - பிரதமர் மோடி சென்னை வருகை
14:04 February 14
13:33 February 14
விழா முடிந்த பின்னர் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.
13:17 February 14
தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒருபோதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது. இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.
யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் மட்டுமே, இலங்கை தமிழர் நலன் காக்கும் மத்திய அரசு மோடி பெருமிதம்.
13:05 February 14
"தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளும் தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படுவர்" - பிரதமர் மோடி
13:00 February 14
"இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதில் நமது ராணுவம் சிறப்பான பணியாற்றி வருகிறது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ டேங்க், நாட்டின் வடக்கு எல்லையை காக்கும் பணியில் ஈடுபடும்" - பிரதமர் நரேந்திர மோடி
12:46 February 14
பாரதியார் பாடலை மேற்கோள்காட்டிய பிரதமர்
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!
12:44 February 14
"கல்லணைக் கால்வாயை சீரமைப்பது மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்; மிக முக்கியமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி" - பிரதமர் மோடி உரை
12:39 February 14
அவ்வையார் பாடலை மேற்கோள்காட்டிய பிரதமர்
"வரப்புயர நீர் உயரும்... நீர் உயர நெல் உயரும்... நெல் உயர குடி உயரும்... குடி உயர கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்" என்ற அவ்வையாரின் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.
12:35 February 14
"சென்னைக்கு நான் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது; தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" - பிரதமர் மோடி
12:33 February 14
தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பிரதமர் மோடி பேச்சு
12:30 February 14
வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
12:25 February 14
ரயில் பாதை திட்டங்கள் அர்ப்பணிப்பு
ரூ.423 கோடி மதிப்பில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையான விழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையையான ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
அதேபோல் சென்னை கடற்கரை - அத்திபட்டு இடையை 21.1 கி.மீ நீளமுள்ள 4ஆவது ரயில் பாதை இணைப்பு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
12:18 February 14
மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
ரூ.3,770 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
புதிய மெட்ரோ ரயில் பாதையில் முதல் ரயிலை ரீனா ஆறுமுகம் என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார்.
12:11 February 14
முதலமைச்சர் பழனிசாமி சிறப்புரை
"தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கு பிரதமருக்கு நன்றி, உலகிலேயே கரோனா தொற்றை கட்டுப்படுத்திய பிரதமருக்கு பாராட்டு; கரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது"
12:02 February 14
பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பல தலைமுறைகளாக நமது தேசம் கண்டிராத தன்னிகரற்ற தலைவர் பிரதமர் - துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேச்சு.
11:49 February 14
புதிய அர்ஜுன் மார்க் 1ஏ ராணுவ பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
11:47 February 14
பிரதமருக்கு நினைவு பரிசு
பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து கிருஷ்ணர் சிலையை பரிசாக அளித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
11:44 February 14
நேரு உள்விளையாட்டு அரங்க மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
11:35 February 14
விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
11:14 February 14
நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் புறப்பட்டார் பிரதமர் மோடி. அங்கு ரூ.8.126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
11:10 February 14
மோடிக்கு உற்சாக வரவேற்பு!
ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக சார்பில் எல்.முருகன், பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
11:02 February 14
ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
10:54 February 14
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு அரசு சார்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு புறப்பட்டார்.
10:41 February 14
புதிய மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர்
பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஓட்டுநராக ரீனா ஆறுமுகம் என்ற பெண் தேர்வாகியுள்ளார். வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயிலை ரீனா இயக்கவிருக்கிறார்.
10:31 February 14
சென்னை வந்தடைந்தார் மோடி
பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்பர் மூலம் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்கிறார்.
10:07 February 14
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
09:37 February 14
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு விழாவில் அதிமுக கூட்டணி கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே மூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே. வாசனும் பங்கேற்கின்றனர். தேர்தல் நேரம் என்பதால் இது கூட்டணியை உறுதி செய்வதற்கான சமிக்ஞை என எதிர்பார்க்கப்படுகிறது.
08:09 February 14
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 10.30 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.
08:07 February 14
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
06:21 February 14
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் மோடி, புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.