ETV Bharat / city

விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை நிர்வாகிகளின் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள்,
விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள்
author img

By

Published : May 11, 2021, 11:19 PM IST

சென்னை: நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் போட்டியிட்டது. ஆறு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே.11) கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டமும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

விசிக சட்டப்பேரவை நிர்வாகிகளின் பட்டியல்

  • தலைவர் - ம. சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார்கோவில்)
  • துணைத் தலைவர்கள் - முகமது ஷா நவாஸ் (நாகப்பட்டினம்), மு. பாபு (செய்யூர் எம்.எல்.ஏ.)
  • கொறடா - எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்)

இக்கூட்டத்திற்குப் பின்னர், நிர்வாகிகளுடன் திருமாவளவன் செல்ஃபி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி’ - திருமாவளவன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.