சென்னை: ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு பாஜக பொது செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆதார் இணைக்காத திட்டங்களே இல்லை. ஆதார் மூலம் போலி ரேஷன் கார்ட் ஒழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வாக்காளர்களை புதுப்பிக்க இந்த பதிவு பயன்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 95.66 விழுக்காடு ஆதார் அட்டை மக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது.
ஆதார் எண்ணை இணைப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு