ETV Bharat / city

சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்! - சூரப்பா

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

vc
vc
author img

By

Published : Nov 6, 2020, 9:41 AM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ” அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதியதை திரும்பப் பெறுங்கள். இல்லை என்றால் சுட்டுக் கொன்று விடுவோம் " என்று மிரட்டி எழுதப்பட்டுள்ளது. மேலும், அக்கடிதத்தில் வீரப்பன் என கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சூரப்பா கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல்துறையினர், கடிதம் தொடர்பாக கொலை மிரட்டல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மிரட்டல் விடுத்தவர் யார், எங்கிருந்து அக்கடிதம் வந்தது என்பது குறித்து அவர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 அவதூறு வழக்குகளில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.