திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சத்தியமூர்த்தி பவனில் இன்று தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் கேட்டு, அதற்கு திமுக தரப்பில் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், 40 தொகுதிகளுக்கு கீழ் கொடுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறி, மக்கள் நீதி மய்யம் அல்லது, அமமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் நாம் கேட்கும் இடங்களை கொடுக்காவிட்டால் தனித்து போட்டியிடலாமா எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நிர்வாகிகளிடம் அவர் பேசி வருகிறார்.
முன்னதாக, திமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் சத்தியமூர்த்தி பவனில் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவேன்: வீரப்ப மொய்லி!