ETV Bharat / city

காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் மறைவுக்குத் தலைவர்கள் புகழ் அஞ்சலி - Governor of Tamil Nadu Banwarilal Purohit

காங்கிரஸ் எம்.பி., வசந்த குமார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினர் புகழ் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

congress-mp-vasantha-kumar
congress-mp-vasantha-kumar
author img

By

Published : Aug 29, 2020, 10:56 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

'கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கியவர். தமிழ்நாடு மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்' - என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    — President of India (@rashtrapatibhvn) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் இறப்புச் செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமூக செயல்பாடுகளுக்காகவும் வசந்தகுமார் மேற்கொண்ட முயற்சிகள் மதிக்கத்தக்கவை.

  • Saddened by the demise of Lok Sabha MP Shri H. Vasanthakumar Ji. His strides in business and social service efforts were noteworthy. During my interactions with him, I always saw his passion towards Tamil Nadu’s progress. Condolences to his family and supporters. Om Shanti. pic.twitter.com/SmuAK8ufAx

    — Narendra Modi (@narendramodi) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவருடன் உரையாடல் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் வசந்த குமார் கொண்ட ஆர்வம் வெளிப்பட்டது. அவரின் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுச்செய்தி தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

மேலும் ஒரு வெற்றிகரமான வணிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா கடவுளின் நிழலில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்' ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

"கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்த குமார் கரோனாவால் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறேன். மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் கொள்கை மீது வசந்தகுமார் கொண்ட உறுதி எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • The news of Kanyakumari MP, Shri H Vasanthakumar’s untimely demise due to Covid-19 has come as a shock.

    His commitment to the congress ideology of serving the people will remain in our hearts forever.

    Heartfelt condolences to his friends and family members. pic.twitter.com/oqhrfQXEUD

    — Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 28ல் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

'காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், நண்பருமான வசந்த குமார் இயற்கை எய்தினார் எனும் செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். வசந்த குமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பெரும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவர் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்லைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

"நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்குத் திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்.

இயக்கம் வேறாக இருந்ததால், இணக்கமாக இல்லையே தவிர, ரத்த பாசம் இருவரிடமும் உண்டு. தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன். சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது.

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது. ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்" என உருக்கமாக தனது சித்தப்பாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார், தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"உழைப்பால் உயர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு முனைந்து பாடுபட்டார். அன்னை இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இப்படிப்பட்ட தலைவர் நம் மத்தியில் இல்லை, அவரது இழப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு" என வேதனை தெரிவித்தார், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

நடிகர் ரஜினிகாந்த்

'அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்' என்றார், நடிகர் ரஜினிகாந்த்

  • அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    — Rajinikanth (@rajinikanth) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நடிகர் கமல்ஹாசன்

'நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு' என இரங்கல் தெரிவித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன்

  • நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.

    — Kamal Haasan (@ikamalhaasan) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாடலாசிரியர் வைரமுத்து

குமரியில் பிறந்து இமயம் வரை புகழ்பெற்ற கறுப்புத்தமிழர் வசந்தகுமார் என்று புகழாரம் சூட்டிய கவிஞர் வைரமுத்து, பூமிக்கு வசந்தமாக வந்து தென்றலாய் பிரிந்துவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.