அதிமுகவில் சேருவதற்கும் ஏற்கனவே கட்சியில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பிப்பதற்குமான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10.8.2020 என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழலில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தர வேண்டி பலரும் தொடர்ந்து வலியறுத்தினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’இழப்பீடு வழங்கிய முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும்’