ETV Bharat / city

காவல்துறையினரின் துன்புறுத்தலால் தூக்கிட்டு பெண் தற்கொலை!

சென்னை: பாண்டிபஜாரில் திருட்டு நகை வைத்திருந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்தியதால் மனமுடைந்த பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் தொடர் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!
author img

By

Published : Jul 30, 2019, 4:52 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பணிப்பெண்கள் வெண்ணிலா, விஜயா ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது, தங்க நகைகள் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட விஜயாவின் மகன் மணி என்பவர், பாண்டிபஜாரை சேர்ந்த பார்வதி மற்றும் அவரது மகள் கவிதாவிடம் தாங்கள் நகைகளை கொடுத்து வைத்ததாகவும் தற்போது அவர்கள் அந்த நகைகளை திருப்பி தரவில்லை என பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பாண்டிபஜார் காவல்துறையினர் பார்வதி, அவரது மகள் கவிதாவை விசாரணை செய்து, அவர்களது வீட்டில் நகை குறித்து சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மகள் கவிதாவை திருட்டு வழக்கில் சிக்க வைப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் திருடிய விஜயா, காவல்துறையினர் மூலம் தொல்லை தருவதாகக்கூறிய பார்வதி, நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் கவிதாவிடம் விஜயா கொடுத்தது சொந்த நகைகளா?. அல்லது முன்னாள் அமைச்சர் வீட்டில் திருடிய நகைகளா? என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:nullBody:முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவரது உறவினர் நகைகள் தங்களிடம் இருப்பதாக கூறி காவல்துறை தொந்தரவு செய்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் பணியாற்றிய வெண்ணிலா விஜயா என்ற இருவர் பல லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகளை வீட்டில் இருந்து திருடியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சில நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்து விஜயாவின் உறவினர் பாண்டிபஜாரை சேர்ந்த பார்வதி மற்றும் அவரது மகள் கவிதாவிடம் தங்கள் நகையை கொடுத்து வைத்ததாகவும் தற்போது அவர்கள் அந்த நகையை திருப்பி தர இல்லை என விஜயாவின் மகன் மணி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் பார்வதியின் மகள் கவிதாவை விசாரணை செய்தனர் அவரது இல்லத்தில் திருடப்பட்ட நகை குறித்து சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் திருடிய விஜயா தனது மகளை அந்த வழக்கில் சிக்க வைப்பதற்காக மகள் மீது திருட்டுப் பட்டம் சுமத்துவதாகவும், தொடர்ந்து போலிசார் தொல்லை தருவதாக கூறி நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விஜயா கவிதாவிடம் கொடுத்தது அவர்களுடைய நகை தானா அல்லது முன்னாள் அமைச்சர் வீட்டில் திருடிய நகைகளாக இருக்குமா என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.