சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பயிற்சிக்கான ஆணையை வாங்கிய பின்பு, அங்கு காவலர்களுக்கான கரோனா பரிசோதனை முகாமில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் பரங்கிமலையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக அறிக்கை வந்ததால் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும், அந்தப் பயிற்சி காவலரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.