ETV Bharat / city

முருகனின் வெற்றிவேல் யாத்திரையை மறக்கடித்த குஷ்புவின் போராட்டம்!

author img

By

Published : Oct 28, 2020, 4:46 AM IST

திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் நடத்தி வரும் போராட்டம், அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகனின் 'வெற்றிவேல் யாத்திரை'யை மங்கச் செய்துள்ளது.

kushboo-protest
kushboo-protest

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் நடத்திவரும் போராட்டங்கள், அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் அறிவித்த வெற்றிவேல் யாத்திரை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திருச்செந்தூர் நோக்கிய யாத்திரைக்காக பாஜக முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

திருமாவளவன் மநு ஸ்மிதியையும் இந்துப் பெண்களையும் அவமானப்படுத்தி விட்டார் எனக் குற்றம் சுமத்தி, பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, திருமாவளவனின் நாடாளுமன்றத் தொகுதியான சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்று கைது செய்யப்பட்டு, விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அங்கு தன்னை விடுதலை செய்யும் படி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் மட்டுமே கடவுள் வசிக்கிறார் என்ற மனுஸ்மிருதி கூறுவதை திருமாவளவன் ஏன் அறிந்திருக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவிற்கு மதம் தேவை" என்று கூறினார்.

குஷ்பு - திருமாவளவன் விவாகரத்தால், பாஜ மாநிலத் தலைவர் எல். முருகனின் வெற்றிவேல் யாத்திரையிலிருந்து ஊடகங்களின் கவனம் குஷ்பு பக்கம் திசை திரும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், காவி கட்சி இந்து ஒற்றுமையை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன், மாநிலத்தை அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் சக்தியாகப் பார்க்கப்பட்டார். திராவிட மாநிலத்தில், பசு அரசியல் தோல்வியடைந்ததை அடுத்து, பா.ஜ.க 'முருகன் அரசியல்' எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகரான பேரா. லெனின், தமிழ்நாட்டில், தேசிய ஜனநாய கூட்டணியைவிட, திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. விசிக தலைவரை குறிவைத்து பாஜக அதை சீர்குலைக்க முயற்சிக்கிறது. கூட்டணியிலிருந்து வி.சி.க.வை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். அதே நேரத்தில், தேர்தலுக்கு முன்பாக, எதிர்முகாமுக்கு செல்ல விரும்பும் பாமக, கூட்டணிகட்சியான அதிமுகவை விமர்சித்து வருகிறது. பாமகவின் இந்த செயல் பாஜகவின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்.

பாஜகவிடம் வாக்குகளை கவர்வதற்கான கருத்தியல் விசயங்கள் இல்லாததால், அரசியல் ஆதாயத்திற்காக குஷ்பூவின் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்துகிறது. இது அவர்களை பாதிக்கும்.

இதையும் படிங்க : பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சமூக விரோதிகள்: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.