சென்னை : ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பது மரபு ஆளுநர் பிரச்சனையான விசயங்களை பேசுவதால்தான், அது பிரச்சினையாக மாறுகிறது. திராவிடம் பற்றி ஆளுநருக்கு எதுவும் தெரியாது, விந்தியமலைக்கு தெற்கே வாழ்கிறவர்கள் தான் திராவிடர்கள் என்பது சான்று, ஆனால் ஹெச்.ராஜா பிரதம மந்திரி கூட திராவிடர் என்று கூறுகிறார்.
அவ்வாறு கிடையாது. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் தான் திராவிடர்கள் என்றும், முகலாயர்கள் கூட திராவிடர்கள் என்று அனுமதிக்காது. தென்னிந்தியா என்பது சுதந்திரமான, முற்போக்கான சிந்தனை உடையது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே குட ஒலை மூலம் ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய ஜனநாயக அமைப்பு.
ஆனால் இதை எல்லாம் அறியாமல் திராவிடம் பற்றி புரியாமல் ராஜா பேசுகிறார். அது ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. ராஜா ஆளுநருக்கு ஆலோசனை சொல்லலாம் மற்றவருக்கு சொல்லவேண்டாம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் பாஜக தான், அதிமுகவை இயக்குவது பாஜக தான். அதிமுக பிரச்சனைக்கு திமுகவோ, காங்கிரஸோ மற்ற எந்த இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எடப்பாடி இப்பொழுதாவது உண்மையை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழகிரி தெரவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவில்லை - அமைச்சர் துரைமுருகன்