உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று (நவ. 04) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறைக்கும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், தலைமைச் செயலகத்தில், உயர்கல்வி, வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுசெய்தார்.
மேலும் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜெ. சிரு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, அரசு இணைச் செயலாளர் டி.ஆனந்த், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.அருணா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் என் . குமார், வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் ஆர்.முருகேசன், விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர் மு.சுப்பையா மற்றும் வேளாண்மைத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் .