ETV Bharat / city

இல்லத்தரசிகளின் கண்ணீரை கண்டுகொண்டதா வெங்காயம்; விலையில் சற்று சறுக்கல்! - கோயம்பேடு சந்தை காய்கறி விலை

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் விலை சற்று சறுக்கலை சந்தித்துள்ளது பொதுமக்களிடத்தில் சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

koyembedu market, vegetable prices down, கோயம்பேடு சந்தை காய்கறி விலை, காய்கறி விலை, vegetable price update
vegetable price update
author img

By

Published : Jan 4, 2020, 11:33 PM IST

சென்னை: வெங்காய விலை உயர்வுதான் 15 நாட்களுக்கு முன்பு வரை தலைப்புச் செய்தியாக இருந்தது. தற்போது அதன் விலை சற்று குறைந்துள்ளது. அநேநேரத்தில் மற்ற காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையின் மொத்த விலைச் சந்தையான கோயம்பேடு காய்கறிச் சந்தையில், கடந்த வாரத்தில் 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சாம்பார் வெங்காயம், தற்போது அதிகபட்சமாக 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாயாக உள்ளது. தரத்திற்கு ஏற்ப 60 ரூபாய் முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தை விலை நிலவரம்

அதேபோல பிற காய்கறிகள் விலை கீழ்வருமாறு (விலை கிலோ ஒன்றிற்கு)

  • பூண்டு ரூ.160 முதல் ரூ.220
  • முட்டைகோஸ் ரூ.20
  • முள்ளங்கி, நூல்கோல், சேனைக்கிழங்கு ஆகியவை ரூ.30
  • அவரைக்காய், பீன்ஸ், பாகற்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீட் ரூட் ஆகியவை ரூ.40 முதல் ரூ.50
  • கேரட் ரூ.70 முதல் ரூ.80 (சென்ற வாரம் 40 ரூபாயாக இருந்தது)
  • மாங்காய் ரூ.150
  • பட்டாணி ரூ.130 ரூபாயாக (சென்ற வாரம் 50 ரூபாயாக இருந்தது)

இக்கட்டான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: 2020 கசப்பு மருந்துக்கான நேரம்!

இது தொடர்பாக பேசிய வியாபாரி செல்வக்குமார், கத்திரிக்காய், பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ், பீட் ரூட் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது, கொத்தமல்லி, வெங்காய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்போது 100 முதல் 150 ரூபாய் வரை உள்ளது. தக்காளி விலையில் மாற்றமேதும் இல்லாமல் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த வாரம் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது" என்றார்.

நீண்ட தூரத்தில் இருந்து கோயம்பேடு வந்து காய்கறி வாங்கிச் சென்ற இல்லதரசி ஒருவர் பேசுகையில், "வெங்காயத்தின் விலை சற்று குறைந்தாலும், அது இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது கேரட் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சிரமமாக உள்ளது" என்றார்.

Intro:Body:

சென்னை:

வெங்காய விலை உயர்வுதான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை தலைப்புச் செய்தியாக இருந்தது. தற்போது அதன் விலை சற்று குறைந்துள்ளது. அநேநேரத்தில் மற்ற காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையின் மொத்த விலை சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த வாரத்தில் 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சாம்பார் வெங்காயம், தற்போது அதிகபட்சமாக 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாயாக உள்ளது. தரத்திற்கு ஏற்ப 60 ரூபாய் முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

பூண்டு கிலோவுக்கு 160 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டைகோஸ் 20 ரூபாய்க்கும், முள்ளங்கி, நூல்கோல், சேனைக்கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய், பீன்ஸ், பாகற்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீட் ரூட் ஆகியவை 40 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கேரட் கடந்த வாரத்தில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாங்காயின் விலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. பட்டாணியின் விலை 50 ரூபாயில் இருந்து 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய வியாபாரி செல்வக்குமார், கத்திரிக்காய், பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ், பீட் ரூட் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது, கொத்தமல்லி, வெங்காய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்போது 100 முதல் 150 ரூபாய் வரை உள்ளது. தக்காளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த வாரம் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது" என்றார்.

நீண்ட தூரத்தில் இருந்து கோயம்பேடு வந்து காய்கறி வாங்கிச் சென்ற இல்லதரசி          ஒருவர் பேசுகையில், "வெங்காயத்தின் விலை சற்று குறைந்தாலும், அது இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது கேரட் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சிரமமாக உள்ளது" என்றார். Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.