கோயம்பேடு சந்தை வளாகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதனடிப்படையில், பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், காய்கறிகள் வாங்க மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், கோயம்பேடு சந்தை நிர்வாகம் ’நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள்’ மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கனிகளை விற்பனை செய்து வருகிறது.
பொதுமக்கள் 7305050541, 7305050542, 7305050543, 7305050544 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு காய்கறிகளை புக் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
அவ்வாறு பதிவு செய்த அனைவருக்கும் காய்கறிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே நல்ல வரவெற்பைப் பெற்றுள்ளது. இதில் ஒரு குடும்பத்திற்கு 5 அல்லது 6 நாட்களுக்குத் தேவையான சுமார் 15 வகை காய்கறிகள் ரூ.220/- க்கு, ஸ்விக்கி (swiggy), சொமேட்டோ (Zomoto) மற்றும் டன்சோ (Dunzo) நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் கோயம்பேடு சந்தை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவும் மையமாகும் கோயம்பேடு சந்தை - நடவடிக்கை கோரி வழக்கு!