கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு சிறுவியாபாரிகள் சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது; கோயம்பேடு சந்தையில், சுழற்சி முறையில் 50 விழுக்காடு கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு, இரவு 10 மணி வரை காலை 4 மணி வரை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் வியாபாரிகள் கடைகள் செல்ல வேண்டி உள்ளதால் காவல்துறையினர் கெடுபிடிகளை தவிர்க்க பாஸ் வழங்க வேண்டும்.
இதே போன்று வெளிமாநில லாரி ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். மீண்டும் கடந்த ஆண்டு போன்று முழு அடைப்பை தாங்க முடியாது. ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த கிழமைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடும்ப தகராறு: நடுரோட்டில் ஒருவரை ஓட ஓட கத்தியால் குத்திய நபர்