சென்னை:சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உடலை அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை.
இந்நிலையில் ராஜசேகர் உடற்கூறாய்வு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ராஜசேகரின் தாயார் உஷா ராணி நேற்று(ஜூன்16) மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில் குடும்பத்தாரிடம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை மாஜிஸ்தி்ரேட் லட்சுமி ஒப்படைத்தார்.
உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோ தந்தால் மட்டுமே உடலை வாங்குவதாக குடும்பத்தினர் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் தற்போது இரண்டரை மணி நேர உடற்கூராய்வு வீடியோவை மாஜிஸ்தி்ரேட் லட்சுமி, ராஜசேகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். ஆனால் புகைப்படங்கள் வழங்கப்படவில்லை என்று ராஜசேகரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கொடுங்கையூர் விசாரணை கைதி சந்தேக மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்..