ETV Bharat / city

'உயிர் காக்க வேண்டிய நேரத்திலும் ஊழல் செய்வதுதான் மலிவான அரசியல்' - கே.என்.நேரு பதிலடி - தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை: தமிழ் நாட்டில் உயிர் காக்கப் போராட்டம் நடைபெற்று வரும் நேரத்தில் ஊழல் செய்வதுதான் மலிவான அரசியல் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.

KN Nehru
KN Nehru
author img

By

Published : Apr 21, 2020, 5:53 PM IST

கரோனா பாதிப்பு பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவி கொள்முதல் குறித்து ஆளும் அதிமுக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக தனது விமர்சனத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பதில் அளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'கரோனா பேரிடர் பாதிப்பு காலத்தில் விளம்பர வேட்கையைத் தேடி முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் பேட்டி கொடுத்து வரும் நிலையில், கரோனா தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் கரோனா தடுப்பிற்காக எத்தனை லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டன? அவற்றில் எத்தனை தமிழ்நாட்டிற்கு வந்தன?; தாமதத்திற்குக் காரணம் என்ன?; பாதுகாப்பு உபகரணங்கள் - பரிசோதனைக் கருவிகள் குறித்து முதலமைச்சர் சொல்வதற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்று எதிர்க்கட்சி மட்டுமல்ல; பொதுமக்களும் கேட்கிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கான விரைவு பரிசோதனைக் கருவிகள் ரூ.337 + ஜி.எஸ்.டி. என்ற வகையில் ரூ.377.44-க்கு வாங்கப்பட்டிருப்பதை அம்மாநில அமைச்சர் வெளிப்படையாக ட்வீட் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் வாங்கப்பட்ட கருவிகளின் விலை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவரான கழகத் தலைவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, கடைசிவரை நேரடி பதில் சொல்ல அமைச்சரால் முடியவில்லை.

பிறகு, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ். அவர்கள் வெளியிட்ட கொள்முதல் உத்தரவு நகல் மூலம், தமிழ்நாட்டில் விரைவு பரிசோதனைக் கருவி ரூ.600 + ஜி.எஸ்.டி. என ரூ.672 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தைவிட ரூ.294.56 கூடுதல் விலைக்கு தமிழ்நாடு வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. கூடுதல் விலை கொடுத்து வாங்கியதன் பின்னணி என்ன என்பதுதான் திமுகவும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எழுப்புகின்ற கேள்வி.

பேரிடர் காலத்திலும் மக்கள் நலனில் அக்கறையின்றி, மிச்சமிருக்கும் காலத்தில் மிச்சம் வைக்காமல் எதை எதை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்கிற ஊழல் திட்டத்தில் மட்டுமே மும்முரமாக இருப்பதுதான் மலிவான அரசியல் என்பதை அமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா காலத்திலும் கொடிய ஊழல்களில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டை ஸ்டாலின் தலைமையிலான திமுக மீட்டெடுக்கும். அப்போது அதிமுக ஆட்சியின் ஊழல் செயல்பாடுகளுக்கு நீதியின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும்' என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் வென்ற மனிதநேயம் - மதவெறியர்கள் திருந்த வீரமணி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.