முருக கடவுளின் பெருமைகளை போற்றி, உடல் உறுப்புகளை காக்க வேண்டுமென பாடப்பட்ட கந்த சஷ்டி கவசத்திற்கு, ஆபாச வார்த்தைகளால் விளக்கமளித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், வீடியோ வெளியிட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டும், வீடியோவில் பேசியிருந்த நாத்திகன் என்ற சுரேந்திரன் சரணடைந்தும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் என்பவர் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வீடியோ பதிவிற்கு, 200 நாட்கள் கழித்து உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளாதாகவும், வீடியோக்கள் நீக்கப்பட்டு மன்னிப்பு கோரிய பிறகும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதால் முன் பிணை வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
'கறுப்பர் கூட்டம்' நிகழ்ச்சி தொகுப்பாளர் முன் பிணை கோரி மனு
சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் என்பவர் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.