சிறந்த குறும்படங்கள் மூலம் விருதுகளை வென்று, திரைத்துறையில் நுழைந்து கவனம் ஈர்த்த, இயக்குநர் கார்த்திக் நரேன், விரைவில் வெளியாகவுள்ள 'நவரசா' ஆந்தாலஜி திரைப்படத்தில் 'ப்ராஜக்ட் அக்னி' பகுதியினை இயக்கியுள்ளார்.
Netflix தளத்தில்..190 நாடுகளில்..
தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'நவரசா' ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது.
'ப்ராஜக்ட் அக்னி' பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறுகையில், "'நவரசா' படத்தை பொறுத்தவரை, அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். சயின்ஸ் பிக்சன் வகையில், ஒரு புதுமையான கனவு முயற்சிதான் இப்படம்.
சிறந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி
இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் வேலைகளை ஒழுங்குபடுத்தியவுடன், முதலில் நான் அரவிந்த் சாமி, பிரசன்னா ஆகிய இருவரைதான் தொடர்புகொண்டேன். இவர்கள் இருவருடனும் ஏற்கனவே நான் பணிபுரிந்துள்ளேன். அரவிந்த் சாமியை பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியை தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார்.
கதாபாத்திரங்களை சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாக பொருந்தியுள்ளார்கள். இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது” என்றார்.
மனித உணர்வுளின் ஒன்பது ரசங்களைக் கொண்டு வெவ்வேறு அழகான கதைகளைக் கூறும் ஆந்தாலஜி திரைப்படமாக 'நவரசா' உருவாகியுள்ளது. 'Justickets' நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: '2022இல் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!'