ETV Bharat / city

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு: தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : Jul 6, 2021, 12:34 AM IST

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் மூன்று கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சம்மன்

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2014 -15, 2015-16ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'வருமான வரித்துறை, வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் தொடங்காத நிலையில், வருமான வரித்துறையின் சம்மனை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.

வழக்கு ரத்து

இதனால் வருமான வரித்துறை சம்மனில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும், சட்டப்படி மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோலோச்சுமா கோலிவுட்? - கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.