ETV Bharat / city

கார்கில் வெற்றி தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்!

author img

By

Published : Jul 26, 2022, 1:09 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இன்று கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதியன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(ஜூலை.26) புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை , முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவர்களை தொடர்ந்து, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: பாரதத்தின் பெருமைக்கும், புகழுக்கும் உரிய கார்கில் வீரர்களுக்கு பிரதமர் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.