ETV Bharat / city

கமீலா நாசருடன் "ஈடிவி பாரத்" பிரத்யேக நேர்காணல்!

சென்னை: மூன்றாவது கட்சியாக உருவாகியுள்ள எங்களது நம்பிக்கை வீண் போகாது என மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் தெரிவித்துள்ளார்.

கமீலா நாசர்
author img

By

Published : Apr 1, 2019, 9:51 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை சூடுப்பிடித்துள்ள நிலையில், மத்திய சென்னை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசருடன் ஈடிவி பாரத் பிரத்யேக நேர்காணல் நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தனது அரசியல் வாழ்வு குறித்தும் அவர் பேசியுள்ளார். அதனை விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன?

என்னுடைய தலைவர் கமலஹாசன் நேர்மையானவர். எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். அப்படிப்பட்டவர் கட்சி ஆரம்பித்துள்ளார். இதில் நான் இணைந்துள்ளேன் என் வீட்டிற்குள் போக வேண்டும் என்றால் பத்து படிக்கட்டுகள் ஏறித்தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஆனால் இன்று ஒரு படி தான் உள்ளது. இந்த சாலை எல்லாம் எப்படி போடப்பட்டது. ரோட்டில் போகும்போது சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. அரசு என்ன செய்கிறது என்று பலவிதமான கேள்வி எழுகிறது. உடனே இந்தியா ஓரு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்று சொல்வார்கள்.

சீனாவில்தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது அவர்கள் சரியாக நிர்வாகம் செய்யவில்லையா. சுத்தமான காற்று இல்லை.சாலை வசதி இல்லை. மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய தண்ணீர் கிடைப்பதற்கு கஷ்டமாக உள்ளது. இது போன்ற பிரச்சினைகள் உள்ள நிலையில்தான் கமலஹாசன் கட்சி ஆரம்பித்தார் என்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தேன். என்னுடைய கல்வி நிர்வாகத்திறமை இதற்கு பயன்படும் என்று நம்புகிறேன்.

நீங்கள் போட்டியிடும் மத்திய சென்னையில் நான்கு வேட்பாளர்களில் மூன்று பேர் ஆண் வேட்பாளர்கள். இவர்களை மீறி வெற்றி பெற நீங்கள் என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?

வியூகம் அமைப்பதை நான் நம்பவில்லை. மக்களிடம் சென்று நெருக்கமாக மனசோடு மனசு பேசுவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன். அதுதான் மாற்றத்தை கொண்டு வரும். மாற்றத்தை நோக்கிதான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.13 மாதத்தில் சென்னையில் உள்ள பெரிய தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் பரப்புரைக்கு செல்லும் பொழுது ஒரு பக்கம் அடித்தட்டு மக்களையும், ஒரு பக்கம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் மக்களையும் சந்திக்கிறோம். அவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மாற்றம் தேவைப்படுகிறது. தேர்தல் வியூகம் அமைக்கத் தேவையில்லை. என்னிடம் பண பலமும் இல்லை. நான் மக்களை சந்திக்கிறேன். இதுதான் என் கட்சியின் சின்னம். இதில் வாக்களித்தீர்கள் என்றால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை தான் நாங்கள் கூற விரும்புகிறோம். பணத்தால் மக்களை விலை கொடுத்து வாங்கிய காலம் மலையேறி விடும் என்று நம்புகிறேன்.

உங்கள் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்?

சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே நாங்கள் திட்டங்கள் வைத்து இருக்கிறோம். ஐந்து வருட திட்டங்கள் வைத்துள்ளோம். எதையுமே நாளைக்கே செய்து பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் சொல்லவில்லை. முதலில் தண்ணீர் பிரச்னை. எங்கு சென்றாலும் பெண்கள் கலர் கலர் குடத்தை தூக்கிக் கொண்டு போகும் அவலத்தை பார்க்கும்போது மனசு வலிக்கிறது. தண்ணீர் பஞ்சத்தை முதலில் போக்க வேண்டும் அதை எப்படி போக்க வேண்டும் என்ற வழிமுறைகள் எங்களிடம் உள்ளது. ஆனால் அதை வெற்றி பெற்றால் மட்டும்தான் செய்யமுடியும் எனநம்புகிறேன்.

கமீலா நாசர்

உங்கள் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பிரச்னைகள் என்ன? எதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளது. கட்சியின் கொள்கை என்று கூறி தேர்தல் அறிக்கையை கொடுக்கிறார்கள். பரிதாபத்திற்குரிய செய்தி என்னவென்றால் இந்த ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கைதான் அடுத்த ஐந்தாண்டு இருக்கும் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். மனசாட்சியும், மறதியும் கூடுதலாக இருக்கக்கூடியமக்கள்தான் தமிழக மக்கள். மறதி எப்போது அவர்களுக்கு வருகிறது என்றால் கையில் பணம் வாங்கி விட்டோம், ஓட்டு போட வேண்டும் என்று தோன்றுகிறது. மக்களை குறை சொல்ல முடியாது. அவர்களைவறுமை கோட்டிற்கு மேல் கொண்டுவர விடுவதில்லை.

தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிமுறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா? நீங்கள் வந்தால் எப்படி செலவிடுவீர்கள்?

ஒரு எம்பிக்கு 25 கோடி ஒதுக்குகிறார்கள். இது அதிகம் பேருக்கு தெரியவில்லை. எம்பி தேர்தல் என்றால் டெல்லி தேர்தல் தானே நாம் ஏன் ஓட்டு போட வேண்டும் என்ற மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. மூன்றாவது கட்சி உருவாகவில்லை. நாங்கள் மூன்றாவது கட்சியாக வந்திருக்கிறோம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை மக்களிடம் வீண் போகாது என்று எண்ணுகிறோம்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சில திட்டங்களை ஒரு வருஷத்தில் செய்யக்கூடிய அனைத்து செயல் திட்டங்களையும் உடனடியாக செய்வோம். இதுவரைக்கும் தொகுதியில் செய்யாததை அப்பொழுது நாங்கள் சுட்டிக் காட்டுவோம். ஆதாரங்களை காட்டுகிறார்கள். இவ்வளவு செலவு பண்ணினேன் என்று. ஆனால் அது எதற்கு செலவு செய்தார்கள், உண்மையிலேயே செலவு செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது. அதிகம் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் தனிமனித தாக்குதல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் நீங்கள் முதலில் கொடுக்கும் குரல் என்னவாக இருக்கும்?

நான் வெற்றி பெற்றால் முதலில் தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கசெய்வேன். தேர்தல் அறிக்கையை நாங்கள் சொல்லவில்லை. அவை இல்லாமல் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அவற்றை பேசுவோம், ஆளும் கட்சியில் இருந்து 37 எம்பிக்கள் இருந்தார்கள். விவசாயிகள் போராட்டத்தை அவர்கள் திரும்பி பார்க்க கூட இல்லை. தற்போது பெண் பாதுகாப்பு குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பின்மை அதிகரித்து உள்ளது. இவற்றை நான் புள்ளிவிவரத்தோடு நாடாளுமன்றத்தில் பேசுவேன்.

சமீபகாலமாக நாசரின் சகோதரர் உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.இந்த குற்றச்சாட்டு உங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

27 ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர் இப்போது பேசியிருக்கிறார். இது அரசியலுக்கு கொடுத்த நான் மிகப்பெரிய விலை. தேர்தல் முடிந்தவுடன் இதைப் பற்றி பேச தயாராக உள்ளேன் எனக் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் கமீலா நாசர் அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன?

என்னுடைய தலைவர் கமலஹாசன்  நேர்மையானவர் எதையுமே வெளிப்படையாக பேசக் செய்யக்கூடியவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் அப்படிப்பட்டவர் கட்சி ஆரம்பித்துள்ளார் இதில் நான் இணைந்துள்ளேன்

 என் வீட்டிற்குள் போக வேண்டும் என்றால் 10 படிக்கட்டுகள் ஏறித்தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் ஆனால் இன்று ஒரு படி தான் உள்ளது. இந்த road எல்லாம் எப்படி போடப்பட்டது ரோட்டில் போகும்போது சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. அரசு என்ன செய்கிறது என்று பலவிதமான கேள்வி எழுகிறது. உடனே இந்தியா ஓவர் populated country என்று சொல்வார்கள். சீனாவில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது அவர்கள் சரியாக நிர்வாகம் செய்யவில்லையா. சுத்தமான காற்று இல்லை  சாலை வசதி இல்லை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய இருக்கக் கூடிய தண்ணீர் கிடைப்பதற்கு கஷ்டமாக உள்ளது.
போன்ற பிரச்சினைகளை உள்ள நிலையில் தான் கமலஹாசன் அவர்கள் கட்சி ஆரம்பித்தார் என்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தேன் என்னுடைய கல்வி நிர்வாகத்திறமை இதற்கு பயன்படும் என்று நம்புகிறேன்

நீங்கள் போட்டியிடும் மத்திய சென்னையில் நான்கு வேட்பாளர்களில் மூன்று பேர் ஆண் வேட்பாளர்கள் இவர்களை வெற்றி பெற நீங்கள் என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்

வியூகம் அமைப்பதை நான் நம்பவில்லை. மக்களிடம் சென்று நெருக்கமாக மனசோடு மனசு பேசுவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன். அதுதான் மாற்றத்தை கொண்டு வரும். மாற்றத்தை நோக்கி தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.  13 மாதத்தில் சென்னையில் உள்ள பெரிய தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் பொழுது ஒரு பக்கம் அடித்தட்டு மக்களும் ஒரு பக்கம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் மக்களை சந்திக்கிறோம். அவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மாற்றம் தேவைப்படுகிறது. தேர்தல் வியூகம் அமைக்கத் தேவையில்லை. என்னிடம் பண பலமும் இல்லை நான் மக்களை சந்திக்கிறேன். இதுதான் என் கட்சியின் சின்னம் இதில் வாக்களித்தீர்கள் என்றால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை தான் நாங்கள் கூற விரும்புகிறோம். பணத்தால் மக்களை விலை கொடுத்து வாங்கிய காலம் மலையேறி விடும் என்று நம்புகிறேன்.

உங்கள் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்

 சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே நாங்கள் திட்டங்கள் வைத்து இருக்கிறோம் ஐந்து வருட திட்டங்கள் வைத்துள்ளோம். எதையுமே நாளைக்கே செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் சொல்லவில்லை. முதலில் தண்ணீர் பிரச்சனை. எங்கு சென்றாலும் பெண்கள் கலர் கலர் குடத்தை தூக்கிக் கொண்டு போகும் அவலத்தை பார்க்கும்போது மனசு வலிக்கிறது தண்ணீர். பஞ்சத்தை முதலில் போக்க வேண்டும் அதை எப்படி போக்க வேண்டும் என்ற வழிமுறைகள் எங்களிடம் உள்ளது ஆனால் அதை வெற்றி பெற்றால் மட்டும் தான் செய்யமுடியும் என்ற நம்புகிறேன்

உங்கள் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பிரச்சனைகள் என்ன? எதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் தான் உள்ளது. கட்சியின் கொள்கை என்று கூறி தேர்தல் அறிக்கையை கொடுக்கிறார்கள். நான் மிகவும் பரிதாபத்திற்குரிய செய்தி என்னவென்றால் இந்த ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கைதான் அடுத்த ஐந்தாண்டு இருக்கும் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் இதற்கு காரணம் .மக்களிடம் மனசாட்சியும் மறதியும் கூடுதலாக இருக்கக்கூடிய  மக்கள் தான் தமிழக மக்கள் . Marathi எப்போது அவர்களுக்கு வருகிறது என்றால் கையில் பணம் வாங்கி விட்டோம் ஓட்டு போட வேண்டும் என்று தோன்றுகிறது வருகிறது என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தான் வாக்கு கேட்டார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். மக்களை குறை சொல்ல முடியாது அவர்களின் வறுமை கோட்டிற்கு மேல் கொண்டுவர விடுவதில்லை.

தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி  முறையாக செயல்படுத்தப்பட்டுள்ள தா? நீங்கள் வந்தால் எப்படி செலவிடுவீர்கள்?

ஒரு எம்பிக்கு 25 கோடி ஒதுக்குகிறார்கள் இது அதிகம் பேருக்கு தெரியவில்லை எம்பி எலெக்சன் என்றால் டெல்லி தேர்தல் தானே நாம் ஏன் ஓட்டு போட வேண்டும் என்ற மன நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்.  மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை கட்சி இல்லை என்றால் அந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்ற போக்கு தான் உள்ளது .மூன்றாவது கட்சி உருவாகவில்லை நாங்கள் மூன்றாவது கட்சியாக வந்திருக்கிறோம் என்று நம்புகிறோம் அந்த நம்பிக்கை மக்களிடம் வீண் போகாது என்று எண்ணுகிறோம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சில திட்டங்களை ஒரு வருஷத்தில் செய்யக்கூடிய அனைத்து செயல்திட்டங்களையும் உடனடியாக செய்வோம் இதுவரைக்கும் தொகுதியில் செய்யாததை அப்பொழுது நாங்கள் சுட்டிக் காட்டுவோம். ஆதாரங்களை காட்டுகிறார்கள் இவ்வளவு செலவு பண்ணினேன் என்று ஆனால் அது எதற்கு செலவு செய்தார்கள் உண்மையிலேயே செலவு செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது அதிகம் பேச வேண்டி இருக்கிறது ஆனால் தனிமனித தாக்குதல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் நீங்கள் முதலில் கொடுக்கும் குரல் என்னவாக இருக்கும்.

நான் வெற்றி பெற்றால் முதலில் தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வோம் தேர்தல் அறிக்கையை நாங்கள் சொல்லவில்லை. அவை இல்லாமல் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது அவற்றை பேசுவோம் ஆளும் கட்சியில் இருந்து 37 எம்பிக்கள் இருந்தார்கள் விவசாயிகள் போராட்டத்தை அவர்கள் திரும்பி பார்க்க கூட துப்பு இல்லை அப்படித்தான் இருந்தது.

தற்போது பெண் பாதுகாப்பு குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு இன்மை அதிகரித்து உள்ளது இவற்றை நான் புள்ளிவிவரத்தோடு பாராளுமன்றத்தில் பேசுவேன்

சமீபகாலமாக நாசரின் சகோதரர் உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார் இந்த குற்றச்சாட்டு உங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா

27 ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர் இப்போது பேசியிருக்கிறார். இது அரசியலுக்கு கொடுத்த நான் மிகப்பெரிய விலை தேர்தல் முடிந்தவுடன் இதைப் பற்றி பேச தயாராக உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.