ETV Bharat / city

'தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்' - கமல் புகழாரம் - கமல் ட்வீட்

சென்னை : ”தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் கருணாநிதி” என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Kamal Haasan
Kamal Haasan
author img

By

Published : Aug 7, 2020, 1:18 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக. 7) கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கருணாநிதி குறித்த தங்கள் நினைவுகளையும் அவரது சாதனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்" என்று பதிவிட்டுள்ளார்.

  • வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.

    — Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுமார் அரை நூற்றாண்டு காலமாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராகவும் பதவி வகித்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தமிழ் என் உயிர் மூச்சு - வையகம் போற்றும் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.