ETV Bharat / city

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: மவுனத்தில் கமல்

author img

By

Published : May 29, 2019, 1:10 PM IST

சென்னை: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் சூழலில் அது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக இருந்துவருகிறார்.

kamalhassan

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை இரவு ஏழு மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிக்கு நட்பு ரீதியாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான எவ்விதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, பொதுவாக இறப்பு, பிறந்தநாள் விழாக்கள், சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற சம்பிரதாய சடங்குகளில் கலந்துகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டாதவர் கமல்.

எனவே, பிரதமர் பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிகிறது. இதனால் அவர் நாளை நடைபெறும் விழாவில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழா - மௌனத்தில் உள்ள கமலஹாசன்.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகும் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை  இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. 
இவ்விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நடிகர் ரஜினிக்கு  நட்பு ரீதியாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார் .

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான எவ்விதமான முடிவும்  இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நாம் பேசியபோது இது குறித்து  சஸ்பென்ஸ் நிலவுவதாகவும்
பொதுவாக இறப்பு மற்றும் பிறந்தநாள் விழாக்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல்  போன்ற சம்பிரதாய சடங்குகளில்  அதிகம் ஆர்வம் இல்லாததால் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் இல்லாதவர் கமலஹாசன் என்பதால் பிரதமர் பதவி ஏற்பு விழா குறித்து  மௌனம் நிலவுவதாக என்று கூறப்படுகிறது.

இருப்பினும் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவிற்கு தேவையான நடைமுறை  மற்றும் சம்பிரதாய பணிகள்  நடைபெற்று வரும் நிலையில் கமலஹாசன் கலந்து கொள்வாரா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.