வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகப் பரப்புரை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மக்களின் வாழ்த்துகளுடன் தேர்தல் பரப்புரைக்குப் புறப்படுகிறோம். பல இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
நகரங்களில் பரப்புரை மேற்கொள்ள கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எங்கள் பரப்புரை சட்டத்திற்குள்பட்டுச் செயல்படும். புதிய நல்ல சீரமைத்த தமிழ்நாட்டை உருவாக்குவதை முன்நிறுத்தி பரப்புரை செய்வோம்.
சீரழிந்துவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மக்களுக்கே தெரியும். அதுபற்றி புலம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இனி செய்ய வேண்டியதை பற்றி மக்களிடம் சொல்வோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் - கமல் ஹாசன் ட்வீட்!