ETV Bharat / city

10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்த படம் 'விக்ரம்' தான்- கமல்ஹாசன்

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்த படம் 'விக்ரம்' தான் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்
கமல்
author img

By

Published : Jun 18, 2022, 9:55 AM IST

விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன் 17) சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் கேயார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், 'வெளிநாடுகளில் ரூ.100 கோடி வசூலை தொட்டது. விக்ரம் திரைப்படம்/ கேரளாவில் தற்போது வரை 35 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் 7 மடங்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 கோடி ஷேர் கிடைத்துள்ளது' என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநனர் லோகேஷ் கனகராஜ், 'கமல் கொடுத்த சுதந்திரம்தான் வெற்றிக்கு காரணம். விக்ரம் வெற்றி, பதற்றத்தையும் , பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வெற்றி வந்த உடனே, ஓய்வு எடுத்து விடாதே என்று கமல் சொன்னார். அடுத்த படத்துக்கு மக்கள் கொடுத்த நம்பிக்கையோடு நகர்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றி விழா

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், 'கடந்த 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான். உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது. சாய்ந்து படுத்துவிட மாட்டேன். வெற்றி ஈஸியாக வந்தது இல்லை; இனி பதற்றமாக இருக்கையின் நுணியில் நான் அமரவேண்டும்.

உண்மையான வள்ளல்கள் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது. "பத்தல பத்தல" என்று பாடல் எழுதினேன். ஆனால், எனக்கு பத்திக்கொண்டது. நாங்கள் குளிக்கும் குளம் கலையுலகம்; இதில் எல்லா மொழிப் படங்களும் வெற்றி பெறும். லோகேஷ் கனகராஜ் வாத்தியாராக மாறவேண்டும். நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும்போதுதான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

உதயநிதியை தனியாக பாராட்ட வேண்டும். பெருங்கிளையாக ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனத்தை உதயநிதி வளர்க்கவேண்டும். தொடர்ந்து, உதயநிதி திரைப்படங்களை விநியோகம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை, தட்டிக்கொடுக்கும் பாராட்டுகளையும் ஊடகங்கள் தந்தன. தரமான சினிமா எடுக்கவேண்டியது நம் கடமை. கல்லா பெட்டியை பார்த்துக்கொண்டே தரமான படம் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கேயார், தமிழ் சினிமாவின் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றிய படம் விக்ரம் என்றார்.

இதையும் படிங்க: 'உதயநிதி ஸ்டாலின் மிக நேர்மையானவர்..!' - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.