ETV Bharat / city

"வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"- கி.வீரமணி வாழ்த்து

பல தடைகளைத் தாண்டி நேற்று வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கி.வீரமணி
author img

By

Published : Jul 23, 2019, 10:41 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழரான விஞ்ஞானி பெருமைமிகு சிவன் அவர்களது தலைமையிலான குழுவினர் இந்த அரிய முயற்சியில் சாதனை படைத்துள்ளனர் என்பது பெருமகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும். சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 மிக வெற்றிகரமான சோதனையாக அமைந்துள்ளது.

இதன் பாகங்கள் பெரிதும் உள்நாட்டிலேயே கிடைக்கும் கருவிகள் - பொருள்கள்மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமது பெருமைக்குரிய தமிழர்தம் பெருமைமிகு விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தது மிகவும் பூரிப்புக்குரிய ஒன்றாகும்.

முதலில் சிறிது தடங்கல் ஏற்பட்டாலும்கூட, அதனால் ஊக்கம் இழந்துவிடாமல், உடனடியாக அதைச் சரி செய்து, எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே அதை ஏவியுள்ளதும் அதுவும் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவப் பகுதியைக் குறி வைத்து ஆய்வு செய்து, தண்ணீர் உள்ளதா என்று கண்டறிவதும் எதிர்கால மானுட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகும்.

இத்தகைய சாதனைகளைப் பெருக்கும்போது, நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, முயற்சிகள் காலத்தின் முன்னோக்கியதாகவும், எதிர்காலம் ஒளி மிக்கதாக அமையவேண்டும் என்பதாகவும் இருக்கவேண்டுமே தவிர, பின்னோக்கி புராணங்களில் விஞ்ஞானத்தைத் தேடிடும் விபரீத முயற்சிகளாகவே அமைந்துவிடக் கூடாது. அது அசல் கேலிக் கூத்தாகவே முடியும். நமது விஞ்ஞானிகளின் - பெண்களின் கூட்டு முயற்சியின் சிறப்பான வெற்றியாக இது பரிமளித்துள்ளது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், அறிக்கையில் "முயற்சி திருவினையாக்கும்",‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’’ என்ற வரிகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

Intro:nullBody:சிறீஅரிகோட்டா என்ற ஆந்திரப் பிரதேச பகுதியில் நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அரிய முயற்சி - வெற்றி வாகை சூடி உள்ளது!
சந்திராயன்II என்ற நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் அறிவியல் சாதனை சரித்திர சாதனையாகி, உலகத்தை வியக்கச் செய்திருக்கிறது!

தமிழ்நாட்டுத் தமிழரான விஞ்ஞானி பெருமைமிகு சிவன் அவர்களது தலைமையிலான குழுவினர் இவ்வரிய முயற்சியில் சாதனை படைத்துள்ளனர் என்பது பெருமகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திராயன்II மிக வெற்றிகரமான சோதனையாக அமைந்துள்ளது.

இதன் பாகங்கள் பெரிதும் உள்நாட்டிலேயே கிடைக்கும் கருவிகள் - பொருள்கள்மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமது பெருமைக்குரிய தமிழர்தம் பெருமைமிகு விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தது மிகவும் பூரிப்புக்குரிய ஒன்று!

முதலில் சிறிது தடங்கல் ஏற்பட்டாலும்கூட, அதனால் ஊக்கம் இழந்துவிடாமல், உடனடியாக அதை சரி செய்து, எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே அதை ஏவியுள்ளதும் - அதுவும் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவப் பகுதியைக் குறி வைத்து ஆய்வு செய்து, தண்ணீர் உள்ளதா என்று கண்டறிவதும் எதிர்கால மானுட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகும்.

இத்தகைய சாதனைகளைப் பெருக்கும்போது, நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, முயற்சிகள் காலத்தின் முன்னோக்கியதாகவும், எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையவேண்டும் என்பதாகவும் இருக்கவேண்டுமே தவிர, பின்னோக்கி புராணங்களில் விஞ்ஞானத்தைத் தேடிடும் விபரீத முயற்சிகளாகவே அமைந்துவிடக் கூடாது. அது அசல் கேலிக் கூத்தாகவே முடியும்!
நமது விஞ்ஞானிகளின் - பெண்களின் கூட்டு முயற்சியின் சிறப்பான வெற்றியாக இது பரிமளித்துள்ளது!
இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

முயற்சி திருவினையாக்கும்!
‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!’’Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.