ETV Bharat / city

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு - நீதிபதி அப்துல் குத்தூஸ்

அதிமுக உள்கட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்யவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து 21 நாள்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டுமெனவும் கே.சி. பழனிசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

admk executive committee meeting
அதிமுக
author img

By

Published : Dec 3, 2021, 12:21 PM IST

சென்னை: டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய சட்ட விதிகளாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் 'ஒற்றை வாக்குப்பதிவு' மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானமானது, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கட்சியின் நிறுவனர், உறுப்பினர்கள் நோக்கத்திற்கு விரோதமானது என கே.சி. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், "இந்தப் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்படும் என கடந்த 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையர்களாக கட்சியின் அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்

இதனால், தேர்தலுக்கு முன்பாக 21 நாள்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாகத் தயாரிக்கப்படவில்லை" என அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை கே.சி. பழனிசாமி முன்வைத்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்யவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து 21 நாள்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில்தான் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக கே.சி. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கானது நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு முறையீடு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: டிச. 7இல் அதிமுக உள்கட்சித் தேர்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.