ETV Bharat / city

'நெகிழிகளுக்கு மாற்று சணல்' - அட்டகாசமான கண்காட்சி

author img

By

Published : Dec 17, 2019, 12:40 PM IST

சென்னை: தேசிய சணல் வாரியம் சார்பாக சணல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் 27 ஸ்டால்களில் 50க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி
சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி

சென்னை மயிலாப்பூரில் தேசிய சணல் வாரியம் சார்பாக நடத்தப்பட்ட சணல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், சணலால் செய்யப்பட்ட பைகள், கைவினைப் பொருட்கள், பொம்மைகள், நகைகள், செயின், தலைக்குப் போடும் கிளிப், சணலால் செய்யப்பட்ட ஓவியங்கள், செல்போன் கவர்கள், கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

காய்கறிகளை வாங்கி சேமிக்க வலை வைத்த பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் காய்கறிகள் வாங்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கலாம். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு தவிர்த்து புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நிறுவனங்கள் சார்பாக 27 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி

இது குறித்து பேசிய பார்வையாளர் சவுந்திரராஜன், "தோல் பைகள், ரெக்சின் பைகளில் கொஞ்சன் அதிக பொருட்களை வைத்தால் கிழிந்து விடும். ஆனால் சணல் பைகள் தரமாக இருக்கும், நீண்ட நாட்கள் உழைக்கும். இங்கு வந்தது திருப்திகரமாக இருந்தது" என்றார்.

பார்வையாளர் சவுந்திரராஜன் மற்றும் தேசிய சணல் வாரியத் துணை இயக்குநர் ஐயப்பன் பேட்டி

இந்தக் கண்காட்சி தொடர்பாக தேசிய சணல் வாரிய துணை இயக்குநர் ஐயப்பன் பேசுகையில், " தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக என்ன வாங்கலாம் என சிந்தித்து வருகின்றனர். அதற்கு மாற்றான பொருள் சணல் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:

கிறிஸ்துமஸ் நேரங்களில் மட்டுமே வெளிச்சமாகும் வாழ்வாதாரம்!

Intro:Body:
சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி

சென்னை மயிலாப்பூரில் தேசிய சணல் வாரியம் சார்பாக நடத்தப்பட்ட சணல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், சணலால் செய்யப்பட்ட பைகள், கைவிணைப் பொருட்கள், பொம்மைகள், நகைகள், செயின், தலைக்கு போடும் கிளிப், சணலால் செய்யப்பட்ட ஓவியங்கள், செல்போன் கவர்கள், கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. காய்கறிகளை வாங்கி சேமிக்க வலை வைத்த பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்கி அப்படியே பிரிட்ஜில் சேமிக்கலாம்.

இந்த கண்காட்சியில் தமிழகம் தவிர்த்து புதுச்சேரி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நிறுவனங்கள் சார்பாக 27 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இது குறித்து பேசிய சவுந்திரராஜன் என்ற பார்வையாளர், "தோல் பைகள், ரெக்சின் பைகளில் கொஞ்சன் அதிக பொருட்களை வைத்தால் கிழிந்து விடும். ஆனால் சணல் பைகள் தரமாக இருக்கும், நீண்ட நாட்கள் உழைக்கும். விலை அதிகம் குறைவு என்பதைத் தாண்டி சணல் பொருட்களை நம்பி வாங்கி பயன்படுத்தலாம். இங்கு பொருட்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, வந்தது திருப்திகரமாக இருந்தது" என்றார்.

சணல் பொருட்களைப் பற்றிய விழிப்புணர் கொண்ட வாடிக்கையாளர்களே இங்கு அதிகம் வந்ததாக வியாபாரிகள் கூறினர்.

இந்தக் கண்காட்சி தொடர்பாக தேசிய சணல் வாரிய துணை இயக்குநர் ஐயப்பன் பேசுகையில், " தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக என்ன வாங்கலாம் என சிந்தித்து வருகின்றனர். அதற்கு மாற்றான பொருள் சணல் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது" என்றார்.
Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.