சென்னை: இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 5) 21,410 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 472 பேர் குணமடைந்துள்ளனர். 443 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 16 ஆயிரத்து 812 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்து 32 ஆயிரத்து 778 ஆகவும் அதிகரித்துள்ளது. உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 571 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 541 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இரண்டு கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 221 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை: கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!