தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை குறைத்து வரும் நிலையில், மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணி ஆகியவை குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.