ETV Bharat / city

தேசியக்கொடியை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - judge s m subramanian judgement on misusing national emblems

தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jan 5, 2022, 1:53 PM IST

Updated : Jan 5, 2022, 2:23 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மறைவிற்கு பின்னர் இந்த வழக்கை, அவரது மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

அதில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, இலச்சினைகள், பெயர் மற்றும் முத்திரைகள், ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை மற்றும் ஊடகங்களில் டிஜிபி விளம்பரம் செய்ய வேண்டும். இதனை, பின்பற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியக்கொடிகள், சின்னங்களை, இலச்சினைகளை பயன்படுத்துபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தவிட்டுள்ள நீதிபதி, இந்த உத்தரவை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கை முடித்து வைத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: போலி கரோனா பரிசோதனை சான்றிதழ்தாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி

Last Updated : Jan 5, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.