செந்தில் பாலாஜி குறித்து பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கரூர் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை இல்லை. இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா? என குறிப்பிட்டுள்ளார்.