இது குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேசும்போது, “ முறைப்படி தமிழ்நாடு அரசு டெட் தேர்வை 18 முறை நடத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 4முறை மட்டுமே தேர்வினை நடத்தியுள்ளது. எனவே அவர்களின் பணிநீக்க செய்யும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த பின்னரும் மாநில அரசு வழங்கவில்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி பதவி உயர்வு, பணி ஓய்வு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 26ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு எங்களது தீர்மானங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் 27ஆம் தேதி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பளர்கள் கூட்டம் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.