ETV Bharat / city

ஸ்டாலினைச் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்! - ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்ய கோரிக்கை

தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அமைப்பான, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசிடம் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஸ்டாலினைச் நேரில் சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

author img

By

Published : Dec 28, 2020, 5:08 PM IST

சென்னை: ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினிடம் நேரில் மனு அளித்தனர்.

அனைத்து கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துச் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையிலுள்ள தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டனர்.

ஸ்டாலினிடம் நேரில் மனு

அதன்படி, முதலாவதாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில், 20க்கும் மேற்பட்ட “ஜாக்டோ-ஜியோ” கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டிற்கு மேலாக நியாயமான கோரிக்கைக்களுக்காக போராடி வருகிறது. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் காலவரையற்ற போராட்டம் நடத்தினோம்.

ஒழுங்கு நடவடிக்கை ரத்து

இதற்காக குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்ட 5068 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல முறை மனு அளித்தும், போரட்டம் முடிவடைந்து 23 மாதங்கள் கடந்த நிலையில், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யாமல் இருப்பது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தல் உள்ளிட்ட எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளனர். அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: உதயசூரியன் பெயரில் திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாரா - செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.