ETV Bharat / city

'விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான்!'

சென்னை: விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'விவசாயிகளுக்கு திமுக செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் எனக் கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்' என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Sep 21, 2020, 7:52 PM IST

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஜெயகுமார் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "விவசாயிகளின் நலனை அதிமுக எப்போதும் பாதுகாக்கும், அம்மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை என்ற வாக்குறுதியைப் பெற்ற பின்னரே அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான். விவசாயிகளுக்கு திமுக செய்துள்ள துரோகத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் எனக் கருதும் ஸ்டாலின் மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

திமுக தமிழ்நாட்டை ஆண்ட காலம் கறுப்பு ஆட்சிக்காலம். 17 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக கச்சத்தீவு என்ற நமது அடிப்படை உரிமையை இல்லாமல் செய்துவிட்டது.

மேலும், ஆட்சியில் இருந்தபோது அன்று மக்களுக்கு துரோகம்செய்த திமுக ஓநாய்கள் அனைவரும் இன்று ஆடுகள்போல வந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவில்லை. அமைச்சர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட பின்னரே அவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.