சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று முதல் 23ஆம் தேதி வரை மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளிலும், ஜூலை 22 முதல் 24ஆம் தேதிவரை கேரள கடலோரப் பகுதிகளில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும், அதேபோல், ஜூலை 23, 24 ஆம் தேதிகளில் கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், ஜூலை 21 முதல் 24 வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே; காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'