ETV Bharat / city

பெண் குழந்தை பெறுவதை இழிவாக நினைக்கும் போக்கு இன்னும் தொடர்வது வேதனையளிக்கிறது - நீதிபதி!

author img

By

Published : Jul 20, 2022, 10:08 PM IST

பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை இழிவாக எண்ணுவதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

MHC
MHC

சென்னை: வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதியருக்கு, லத்திகா என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், ஹாசினி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சத்யா மூன்றாவதாகவும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால், தன்னை துரதிர்ஷ்டசாலி என சமூகம் இகழ்ந்ததால் விரக்தி அடைந்த சத்யா, முதல் குழந்தையான லத்திகாவை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததுடன், தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தாய் சத்யா காப்பாற்றப்பட்ட போதும் இரு குழந்தைகளும் இறந்துவிட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சத்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சத்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரதச்சக்கரவர்த்தி, பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை இழிவாக எண்ணும் போக்கில் இருந்து சமூகம் இன்னும் தன்னை திருத்திக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என்று வேதனை தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது நான்காவதாக பெண் குழந்தை பெற்றுக் கொண்ட சத்யா, நீதிமன்ற உத்தரவின் படி இரு பெண் குழந்தைகளுடன் நேரில் ஆஜரானார். நடந்த சம்பவத்துக்காக நீதிமன்ற அறையிலேயே கதறி அழுத அவர், ஆண் குழந்தைகளைப் போல பெண் குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான் என்பதை தற்போது உணர்ந்து கொண்டதாகவும், இரு குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்து வளர்ப்பதாகவும் உத்தரவாதம் அளித்தார்.

அவரது உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பரதச்சக்கரவர்த்தி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு வரையாவது இரு குழந்தைகளையும் படிக்க வைப்பதாக சத்யா உத்தரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குழந்தைகளைப் படிக்க வைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.

இதையும் படிங்க:மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில் 'ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்' - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.