ETV Bharat / city

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: குழு அமைக்காத அரசுகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: குழு அமைக்காத அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

author img

By

Published : Nov 27, 2020, 5:07 PM IST

Updated : Nov 27, 2020, 6:43 PM IST

16:53 November 27

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில், இளங்கலைப் படிப்பில் (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலைப் படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வை நடத்தி வருகிறது.

இவ்வாறு மத்திய அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில், தமிழ்நாடு அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு, அதிமுக, பாமக, திராவிடர் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்து, கடந்த ஜூலை 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், 'அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவெடுக்க வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குநர், மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் கொண்ட குழுவை அமைத்து இறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு 3 மாதங்களில் அக். 2020இல் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,உயர் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி திமுக எம்.பி-யும், செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில்,கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறைச் செயலர் அமைத்த குழுவில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோரை சேர்க்கவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மத்திய - மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால்,
மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாரம்பரியத்தை காக்க மணக்கோலத்தில் மாட்டுவண்டியில் பயணித்த தம்பதி!

Last Updated : Nov 27, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.