ETV Bharat / city

புதிய வணிகவரி கோட்டங்கள் நடப்பாண்டில் தொடங்கப்படும் - தமிழ்நாடு அரசு - அரசாணை

புதிதாக ஏழு வணிக வரி நிர்வாக கோட்டங்கள் நடப்பாண்டில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Oct 29, 2021, 3:45 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் வணிகவரி தொடர்பாக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் வணிகவரி துறையில் தற்போது 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன.

திருவள்ளூவர் மாவட்டத்தில் ஓர் இடத்திலும், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட ஏழு இடங்களில் வணிகவரித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிய வணிகவரி கோட்டங்கள் நடப்பாண்டில் தொடங்கப்படும். இதன் மூலம் கூடுதல் மனித வளங்களை களப்பணிக்கு அனுப்பவதுடன் வரிவசூல் நிர்வாக ரீதியில் மேற்கொள்ள உதவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனிக்கோட்டம் அமைக்கப்படுவதால் வணிகர்கள் வரி வருவாயை தங்கள் பகுதியிலேயே செலுத்த முடியும், அதே சமயம் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.