ETV Bharat / city

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ - risat 2br1

ஸ்ரீஹரிகோட்டா: ’ரீசாட் - 2பிஆர்1’ செயற்கைக்கோளுடன் ’பி.எஸ்.எல்.வி. சி-48’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

rocket
rocket
author img

By

Published : Dec 10, 2019, 7:53 PM IST

பூமியைக் கண்காணிக்க ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது. இதிலுள்ள சக்திவாய்ந்த படப்பதிவுக் கருவிகள் பூமியை படமெடுத்து அனுப்பும் திறன் கொண்டது. வேளாண்மை, வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு ஆகியவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தச் செயற்கைக்கோளானது ஐந்து ஆண்டுகள் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் நாளை மாலை 3:25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 'கவுண்டவுன்' இன்று மாலை 4: 40 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சேர்த்து அனுப்பப்படவுள்ளன.

சுமார் 628 கிலோ எடையுள்ள ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள், 37 டிகிரி சாய்வில் 576 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. வரிசையில் 50ஆவது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-48, கியு எல் திறன் (4 உந்து மோட்டார்கள்) கொண்ட வரிசையில் இரண்டாவது ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 75ஆவது ஏவுதல் மற்றும் முதலாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் 37ஆவது ராக்கெட் இதுவாகும்.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மக்கள் பார்க்கும் வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தது லேண்டரின் பாகங்கள் தானா? - என்ன சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை!

Intro:Body: பி.எஸ்.எல்.வி C48 / ரிசாட் -2பி ஆர் 1 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் மூலம் ரிசார்ட் 2 பி ஆர் 1 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 3:25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக 'கவுன்டவுன்' இன்று மாலை 4: 40 மணிக்கு தொடங்கியது.

சுமார் 628 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், 37 டிகிரி சாய்வில் 576 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பூமியை கண்காணிக்கும் பணிக்காக இந்த செயற்கை கோளானது அனுப்பப்படுகிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் பூமியை படம் எடுத்து அனுப்பும். மேலும் வேளாண்மை, வன கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு, கடலோர கண்காணிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். 5 ஆண்டுகள் இந்த செயற்கைகோள் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் (1), இத்தாலி (1), ஜப்பான் (1) மற்றும் அமெரிக்கா (6) ஆகிய 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட்டில் அனுப்ப உள்ளோம்.

பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் ஆகும். கியு எல் திறன் (4 உந்து மோட்டார்கள்) கொண்ட வரிசையில் பிஎஸ்எல்வி சி 48 இரண்டாவது ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75 ஆவது ஏவுதல் மற்றும் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 37வது ராக்கெட் ஆகும்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மக்கள் பார்க்க, ஸ்ரீஹரிகோட்டாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.