ETV Bharat / city

கோவிலை நிர்வகிப்பதுதான் அரசின் வேலையா? - ஜக்கி வாசுதேவ்

சென்னை: இந்துக் கோவில்களை பராமரிக்கும் பொறுப்புகளை குழுவை உருவாக்கி அவற்றிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

jakki
jakki
author img

By

Published : Mar 13, 2021, 8:21 PM IST

’கோவில் அடிமையை நிறுத்து’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஈஷா யோகா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ், புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன் தொடக்கமாக திரை நடிகர் சந்தானம், ஜக்கி வாசுதேவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ஜக்கி வாசுதேவ், ”கோவில் என்பது நமது ஆன்மா. அதனை அரசின் அடிமையாக வைத்திருப்பது வருத்தமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்துக்களின் கோவில்களை பராமரிக்க அவர்களில் நேர்மையான திறமையானவர்கள் இல்லையா? அவர்களை கொண்டு குழுவினை அமைத்து கோவிலை நிர்வகிக்க வேண்டும். அரசாங்கம் செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. கோவிலை நடத்துவதுதான் அரசின் வேலையா?

கோவிலை நிர்வகிப்பதுதான் அரசின் வேலையா? - ஜக்கி வாசுதேவ்

ஈஷா யோகா மையத்தால் வனத்துறை, பழங்குடியினர் நிலம் ஒரு இன்ச் எடுத்திருப்பதாக நிரூபித்தால் நாட்டை விட்டே செல்கிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி புதுப்பித்தாலும், மீண்டும் அதே நிலைக்குத்தான் கோவில்கள் வரப் போகின்றன. எனவே கோவில்களை பராமரிக்கும் பொறுப்பை அரசு நடத்தாமல் அதனை சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் நடத்தப்படும் - இந்து சமய அறநிலைய துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.