ETV Bharat / city

'சர்வதேச அரசியல் பேசும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' - நடிகர் தினேஷ் பெருமிதம்! - இடக்குநர் அதியன் ஆதிரை

சென்னை: "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் என்னுடைய சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான, பெருமைக்குரிய படமாக இருக்கும். சர்வதேச அரசியல் இப்படத்தில் உள்ளது." என்று, நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தினேஷ்
author img

By

Published : May 3, 2019, 4:13 AM IST

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தியில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தினேஷ். அப்படத்தில் எத்தனை முறை காதல் தோல்வி ஏற்பட்டாலும் அலட்டிக்காத கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணனின் கானா பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன.

இதையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் தினேஷ். ராஜூமுருகனின் 'குக்கூ', வெற்றிமாறனின் 'விசாரணை' ஆகிய படங்களில் கதையின் தேவைக்கேற்ப உடலை வருத்தியும், இயல்பான நடிப்பையும் கொடுத்திருந்தார். தற்போது சினிமாவில் இயக்குநர்களின் நடிகராகவும் வலம் வருகிறார் தினேஷ். தற்போது பரியேறும் பெருமாள் படத்திற்கு பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

irandam ulga porin kadaisi gundu
இரண்டாம் உலகப்போரி ன் கடைசி குண்டு படத்தில் நடிகர் தினேஷ்

இந்த படம் குறித்து நடிகர் தினேஷ் கூறுகையில், "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் பொருந்திப்போகும். இந்த படத்தில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அதேசமயம் அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் வந்துள்ளது. ஒரு லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம். என் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்ப முக்கியமான, பெருமைக்குரிய படமாக இருக்கும்" என்றார்.

 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ' என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் - நடிகர் தினேஷ்.

"அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக  நல்ல வரவேற்பை பெற்றார். 

 "குக்கூ", "விசாரணை" ஆகிய படங்கள் கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ்,  நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  

அந்த வரிசையில்  தற்பொழுது  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில்  "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. 

இதுகுறித்து நடிகர் தினேஷ் கூறுகையில்,

"குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும் எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.

அடுத்தடுத்து தமிழகம் மற்றும்  மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறார் தினேஷ்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.