vehicle accident: சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்துவருபவர் கார்த்திகேயன் ஐபிஎஸ். நேற்று (ஜனவரி 9) முழு ஊரடங்கு என்பதால் இரவு 7 மணியவில் தனது பி.எஸ்.ஓ. விஜயகுமாருடன், கார்த்திகேயன் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார்.
வாகனத்தை ஆயுதப்படை காவலரான மனோஜ் (25) ஓட்டிவந்தார். இந்நிலையில் காரானது கீழ்பாக்கம் சில்வன் லாட்ஜ் காலனி பகுதியிலிருந்து ரங்கநாதன் தெருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
![ஐபிஎஸ் அதிகாரி சென்ற வாகனம் மோதி விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ipsaccident-script-7202290_10012022105315_1001f_1641792195_1095.jpg)
அப்போது கெல்லீஸ் சிக்னலில் இருந்து ரங்கநாதன் தெரு நோக்கிவந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக துணை ஆணையரின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றார்.
காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த அண்ணா சாலை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவலர் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரான வேப்பேரியைச் சேர்ந்த சையது நிஷார் அகமது (54) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
![ஐபிஎஸ் அதிகாரி சென்ற வாகனம் மோதி விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ipsaccident-script-7202290_10012022105315_1001f_1641792195_611.jpg)
விசாரணையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே தடுப்புகள் வைத்துள்ளதால் வளைவில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் விபத்து நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவலர் சையதிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்!