ETV Bharat / city

செப்., 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி! - மாவட்டங்களுக்கு இடையே பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

Intra state bus transport will begins from sep 7

author img

By

Published : Sep 2, 2020, 1:54 PM IST

Updated : Sep 2, 2020, 4:27 PM IST

13:49 September 02

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து, ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதமலைச்சர்  பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கரோனா தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இச்சூழலில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.  

அந்தவகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard Operating Procedure) செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு,  தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றி இதே நாள் முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று முதலமைச்சர் தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Last Updated : Sep 2, 2020, 4:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.