ETV Bharat / city

'ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் யோகா' - சர்வதேச யோகா தினம் - நோய்நாடி நோய்முதல் நாடி

இன்று 7ஆவது சர்வேதச யோகா தினம் 'ஆரோக்கியத்திற்கான யோகா' எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுதந்திர உணர்வு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை யோக பயிற்சியின் முக்கிய நோக்கம்.

7ஆவது சர்வேதச யோகா தினம்
7ஆவது சர்வேதச யோகா தினம்
author img

By

Published : Jun 21, 2021, 9:18 AM IST

யோகா என்பது மிக நுண்ணிய அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக ஒழுக்கம். இது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், யோகா என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் கலை மற்றும் அறிவியல்.

மனதுக்கு நிரந்தர அமைதியை அளித்து, நாம் யாரென்பதை உணந்துகொள்ளும் வகையில் உடலும் மனமும் ஆன்மிகத்துடன் இணைந்து பயிற்சி செய்யும் இந்தக் கலை, பண்டைய இந்தியாவில் தோன்றியது. ’யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ‘யுஜ்’ என்ற சொல்லில் இருந்து பிறந்தது, ‘இணைவதற்கு’ அல்லது ‘கலப்பதற்கு’ அல்லது ’ஒன்றிணைவதற்கு’ என்பது தான் இந்த சொல்லின் பொருள்.

யோகா

தன்னை உணர்ந்து கொள்ளுதல், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ‘விடுதலை உணர்வை அடைதல் (மோக்‌ஷா) அல்லது ‘சுதந்திரம்’ (கைவல்யா) தான் யோகாவின் குறிக்கோள். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுதந்திர உணர்வு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை யோக பயிற்சியின் முக்கிய நோக்கம்.

"யோகாவின்” மூலம் அகத்தில் பல்வேறு வகைகளில் பொதிந்துள்ள அறிவியலை உணர்வதோடு, அதில் நிபுணத்துவம் பெற்று விதியை வெல்லலாம். சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளில் நமது புகழ் பரப்பியதில் வெற்றிகண்டதைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் சென்ற குருக்கள், யோகப் பயிற்சியை அங்கு அறிமுகம் செய்தனர்.

1980களில் மேற்கத்திய உலகில் யோகப் பயிற்சியானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சியாக புகழ்பெறத் தொடங்கியது. இந்த வகை யோகாவை ஹதா யோகா என்றழைத்தனர்.

யோகா

யோகா சாதனாவின் அடிப்படைகள்:

யோகா ஒரே நேரத்தில் ஒருவரின் உடல், மனம், உணர்வு மற்றும் ஆற்றலின் மீது செயல்படுகிறது. இது நான்கு நிலைகளாக வகுக்கப்படுகிறது: கர்ம யோகா, இது உடலின் மீது செயல்படுகிறது; பக்தி யோகா, நமது உணர்வுகளின் மீது செயல்படுகிறது; ஞான யோகா, நமது மனம் மற்றும் அறிவின் மீது செயல்படுகிறது; க்ரியா யோகா, நமது ஆற்றலின் மீது செயல்படுகிறது.

சூரிய நமஸ்காரம்:

சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல். மன அழுத்தத்தை குறைத்து மனதுக்கு அமைதியையும் ஒருமுகப்படுத்தலையும் அதிகரிக்கும்.

தியானா(தியானம்):

எண்ண ஓட்டங்கள் ஏதுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் நிலை. ஆழமான அமைதியை அளிப்பதோடு, பதட்டத்தைக் குறைத்து, தசை இறுக்கத்தை தளர்த்தி, தலைவலியை போக்குகிறது.

யோகா

ப்ரணாயாமா:

இதற்கு “சுவாசத்தில் ஒரு இடைநிறுத்தம்" என்று அர்த்தம். இது ஆன்மிக பலத்தை அதிகரிப்பதோடு, உற்சாகத்தையும் ஆழ்நிலை அமைதியையும் அளிக்கிறது.

கோவிட் 19 & யோகா

யோகா நமது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கோவிட் -19 பாதிப்பைத் தடுக்கிறது. சில யோகா மற்றும் ப்ரணாயாமா பயிற்சிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் சுவாச ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

ப்ராஹ்மரி பயிற்சியானது, நைட்ரிக் ஆக்ஸைடு அதிகரிப்பின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, மூக்கில் எண்ணெய் விடுதல், ஆவி பிடித்தல், தியானம் இவை வைரஸ் தாக்கக்கூடிய அனைத்து காரணிகளையும் தடுத்து எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. தியானத்துடன் கூடிய யோகா பயிற்சியின் மூலம் எளிதாக கோவிட் -19 பாதிப்புக்கு பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

மிகச் சிறந்த ஆரோக்கிய சூழலை உருவாக்குவதற்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் தியானம் ஆகியவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகா என்பது எந்த மதத்தையும், நம்பிக்கையையும், சமூகத்தையும் சார்ந்ததல்ல; எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவியாக பயன்படுகிறது. பாரம்பரியம், பண்பாடு, நம்பிக்கை இவற்றைத் தாண்டி யோகாவை நம்பி உண்மையாக பயிற்சி செய்பவர்கள் அதன் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

7ஆவது சர்வேதச யோகா தினம்

தற்போது உலகளவில் உள்ள லட்சக்கணக்கானோர், பண்டைய யோக கலைகளையும், நவீன கலைகளையும் கற்றுத்தரும் குருக்களால் பயனடைந்து வருகின்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் இந்தப் பயிற்சியால், சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு மற்றும் சுய மதிப்புகளை வளர்த்துக்கொள்ள முடியும். நாளுக்கு நாள் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

நோய்நாடி நோய்முதல் நாடி

இன்று 7ஆவது சர்வேதச யோகா தினம் 'ஆரோக்கியத்திற்கான யோகா' எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது உரையில்,

'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்'

எனும் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியான செயலைச் செய்யவேண்டும் என்பது இதன் பொருளாகும்.

இதையும் படிங்க: யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.