சென்னை: பிப்ரவரி 19 அன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம், அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுக்கு மொத்தம் ஐந்தாயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்குத் தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும், முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு சிசிடிவி கேமரா என ஐந்தாயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான, மிகவும் பதற்றமான ஆயிரத்து 139 வாக்குச்சாவடிகளில் நேரலையில் (web streaming) கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள மையங்களில் ஐந்தாயிரத்து 794 சிசிடிவி கேமராக்களும், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைகளும் (strong room) 324 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் ஆறாயிரத்து 118 சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்கள் அதன் பொதுவழிகளில் சேர்த்து 740 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் சென்னையில் தேர்தல் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள், நேரலையாகக் கண்காணிக்க மாநகராட்சி ஏற்பாடுசெய்துள்ளது.
இதற்காக மொத்தம் ஐந்து கோடியே 88 லட்சம் 32 ஆயிரத்து 617 ரூபாய் மாநகராட்சி ஒதுக்கிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: துணிக்கு இஸ்திரி போட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை